College Code - 1071009 0 Visitors
  • icon04652-263507
  • icongasckanyakumari01@gmail.com
  • iconPalkulam, Kanyakumari - 629 401

Welcome to Government Arts and Science College, Palkulam, Kanyakumari - 629401

||

NIRF - 2024

||

M S University Question Bank is available at the Downloads Menu. Click to view

RULES AND REGULATIONS


Rules and Regulations


  • மாணவர் சமுதாயத்தின் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் மாணவர்கள் கல்லூரி வளாகத்திலும், வெளியிலும் நன்முறையில் நடந்துகொள்ளவேண்டும். மாணவர்கள் அனைத்து நாட்களிலும் சீருடை அணிதல்வேண்டும்.

  • கல்லூரி வளாகத்திற்குள் முதன்முறையாகத் தங்கள் ஆசிரியர்களைக் காணும் மாணவர்கள் வணக்கம்செய்தல் பண்பாடாகும்.

  • மாணவர்கள் வகுப்புகளுக்குத் தவறாமல் குறித்த நேரத்தில் வர வேண்டும்.

  • காலம் கடந்துவரும் மாணவர்கள் துறைத்தலைவரின் இசைவு பெற்றபின்னரே வகுப்பறைக்குள் வரவேண்டும்.

  • மாணவர்கள் விடுப்பு எடுக்கும்போது விடுப்பு விண்ணப்பத்தைத் துறைத்தலைவரிடம் அளித்தல்வேண்டும்.

  • ஆசிரியரின் இசைவின்றி மாணவர்கள் வகுப்பைவிட்டு வெளியில் செல்லக்கூடாது.

  • கல்லூரிச்சுவர்களில், வகுப்பறைச்சுவர்களில், கரும்பலகைகளில் எழுதுவதோ, அறிவிப்பு ஒட்டுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • தங்கள் வகுப்பறைகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மாணவர்களின் கடமையாகும்.

  • அனுமதியின்றி மாணவர்கள் முதல்வர் அறை, அலுவலகம், ஆசிரியர் அறைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றிற்குள் செல்லக்கூடாது.

  • மாணவியர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளை ஓய்வு அறைக்கோ அல்லது அப்பகுதிக்கோ மாணவர்கள் செல்லக்கூடாது.

  • முதல்வரின் முன்ஓப்புதல் இன்றி கல்லூரியில் எந்தக் கூட்டமும் நடத்தவோ மாணவர்களிடையே எந்தவிதமான அறிக்கையையும் சுற்றுக்கு விடவோ அறிவிப்புப் பலகையில் எழுதவோ கூடாது.

  • மாணவர்கள் சாதி, மதம் அரசியல் கட்சி தொடர்பான வேறுபாடுகளைக் கல்லூரிக்குள் கொணர்ந்து பொது அமைதிக்குக் கேடான செயல்களில் ஈடுபடக்கூடாது. அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

  • முதல்வரின் அனுமதி பெறாமல் மாணவர்கள் எந்த மன்றத்திலோ, குழுவிலோ, சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது. இவ்விதிமுறைகட்கு முரணாக எம் மாணவரேனும் ஈடுபடுவதாக அறியவரின் அவர் கல்லூரியினின்றும் உடனே நீக்கப்படுவார்.

  • கல்லூரிச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது குற்றமாகும். வேண்டுமென்றோ, தற்செயலாகவோ கல்லூரிச் சொத்துக்களைச் சேதப்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதற்கான தொகையும் வசூலிக்கப்படும்.

  • மாணவர்கள் தமக்குக் குறைகள் இருப்பின் தம் துறைத்தலைவரிடம் சென்று முதலில் முறையிடவேண்டும். மாணவர்கள் கூட்டமாக முதல்வரிடம் செல்லக்கூடாது.

  • கல்லூரி விதிகளை மீறும் மாணவர்களுக்குத் தண்டனை அளிப்பதில் முதல்வரின் முடிவே இறுதியானது.

  • கல்லூரி வளாகத்தின் உள்ளேயோ அல்லது வெளியிலோ பகடிவதை (ragging) செய்யும் மாணவர்கள்மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்படுகிறது.

  • கல்லூரி மாணவியர்களைக் கேலி செய்யும் (Eve teasing) மாணவர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஜாமீனில் வெளிவர இயலாதபடி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவிக்கலாகிறது.

  • மாணவர்கள் (ஆண்கள்) கைகளில் கயிறு, ரப்பர்பேன்ட், காதில், கம்மல் பாசி மாலைகள் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. சீராக முகச்சவரம் செய்து தலைமுடி வெட்டப்பட்டுக் கல்லூரிக்கு வருகைபுரிய வேண்டும். மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன் படுத்துவது தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
-முதல்வர்